Friday 13 January 2017

விகடன் விருது 2016

விகடன் விருது 2016
சிறந்த சிறார் இலக்கியம்
மாயக்கண்ணாடி, ரூ.70
உதயசங்கர், நூல்வனம் வெளியீடு
‘ஒரு ஊர்ல ஒரு ராஜா...’ என ஆரம்பிக்கும் எளிய நீதிக்கதைகள்தான். ஆனால், வித்தியாசமான கற்பனைகளால், சிறார்களை பல புதிய அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கின்றன இந்தத் தொகுப்புக் கதைகள். பெரும்பாலான கதைகளின் மையப்பாத்திரம் ராஜாதான். ஆனால், அவை ராஜாவைப் பற்றி பெருமை பேசுபவை அல்ல. அவரின் அதிகாரத்தைக் கேலிசெய்பவை. சிறார்களுக்குப் புரியும் வார்த்தைகளில் எளிய கதைகளாகச் சொல்லும் உதயசங்கர், தனது சுவாரஸ்யமான சொல்முறையால் பெரியோர்களையும் ஈர்க்கிறார். சிறார்களின் மனதில் அவர்களும் அறியாதவாறு அதிகாரத்துக்கு எதிரான விமர்சனத்தை உருவாக்க முயலும் இந்த `மாயக்கண்ணாடி’, சமூகத்துக்குத் தேவையான தற்கால அவசியம்!
தொடர்புக்கு: 9176549991
சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும் ஸ்டால் எண்கள்
டிஸ்கவரி புக் பேலஸ்: 193- 194
தமிழினி: 475-476
மேன்மை: 334

4 comments:

  1. இனிய தோழனுக்கு வாழ்த்துகள்!
    அங்கீகாரங்களைக் கடந்த எழுத்து, உன்னுடையது, (நான்ஏற்கெனவே என் வலைப்பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறேன்) எனினும், விருதுகள் உற்சாகமுடன் தொடர உதவும்தானே?
    இன்னும் இன்னும் இனிமையாக, எழுத்துப் பணிகள் தொடர என் அன்பான வாழ்த்துகள் -தோளில் கரம்பதித்து, கைகளை அழுந்தப் பிடித்துக் குலுக்கி மகிழ்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்!. உங்களன்பும் அக்கறையும் என்னை நெகிழச்செய்கிறது.

      Delete
  2. மிக்க் ம்கிழ்ச்சி. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete