தேடாதீர் என்னை
இந்தப்புகைப்படத்தில்
வெற்றியின் வெண்கொற்றக்குடைக் கர்வத்தைச்சூடி
புகழின் செங்கோலைக் கையிலேந்தி
உலகையாளும் புன்முறுவலோடு
வரிசையாய் அமர்ந்திருக்கும் வெற்றியாளர்களின்
இந்தப் புகைப்படத்தில்
தேடாதீர் என்னை
இந்தப் புகைப்படத்திலும் கூட
தேடாதீர் என்னை
தோல்வியின் முட்கிரீடம் தலையில் சூடி
சோகத்தின் சிகரத்தில் தனிமையின்குறுவாள்
இதயத்தில் இறங்க ரத்தம் சொட்டும்
தோற்றவர்களின் இந்தப் புகைப்படத்திலும்
தேடாதீர் என்னை
வெற்றியென்றோ
தோல்வியென்றோ
முற்குறிப்பில்லாத நான்
எல்லாப்புகைப்படங்களுக்கும் வெளியே
நின்று கொண்டிருக்கிறேன்
நீண்டகாலமாய்.
வெற்றி - தோல்வி சொன்னவிதம் வித்தியாசம்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteமன உறுதி?......
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநன்றி.